நடிகர் விஜய் 51 ஆவது பிறந்தநாள் – தங்க தேர் இழுத்து ரசிகர்கள் வழிபாடு
திருச்சி, ஜூன் 23 தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் 51 வது பிறந்தநாளை நேற்று (ஜூன்22) அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடினர்.
நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நலத்திட்ட உதவிகள் நடைபெற்றன.
அதேபோல திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் RK ராஜா தலைமையில் நடிகர் விஜய் அவர்களின் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது மேலும் தங்கத்தேர் இழுக்கு வைபவம் நடைபெற்றது இதில் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
மேலும் விஜய் அவர்களில் பிறந்தநாளை முன்னிட்டு கோவில் அருகே கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது