மினிபேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூன் 25 மினி பேருந்து சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் உள்ள கிராம பகுதிகளில் பேருந்து சேவைகளின் அதிகரிப்பை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழக முதல்வர் தஞ்சை மாவட்டத்தில் மினி பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் . இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் கீழ்கண்டார்கோட்டை-சத்திரம் பேருந்து நிலையம்(வழி:ஆலத்தூர், மே.க.கோட்டை, கணேசபுரம்) மற்றும் திருவெறும்பூர்-சத்திரம் பேருந்து நிலையம்(வழி: விதிவடங்கம்) ஆகிய இரண்டு வழித்தடங்களில் சிற்றுந்து சேவையைத் கொடியசைத்து துவக்கி வைத்து, அதில் சிறிது தூரம் பயணம் செய்தார்.
மேலும் இந்த மினி பேருந்தானது அதிகாலை 4.30 மணியளவில் புறப்பட்டு காட்டூர் வழியாக மார்க்கெட் சென்று சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைகிறது ஒரு நாளைக்கு பத்து நடை இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் மதிவாணன் பகுதிக் கழகச் செயலாளர்கள் நீலமேகம் சிவக்குமார் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.