திருச்சி மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு
திருச்சி, ஜூன் 25 திருச்சி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக வே.சரவணன், மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதீப்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஊராட்சிகளில் நிருவாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்து வே.சரவணன் திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய மாவட்ட ஆட்சியராக வே.சரவணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.