திருச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்

0 274
Stalin trichy visit

திருச்சி ஜூன் 25- திருச்சியில் இன்றும், நாளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறுகிறது.
இதில் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், குணசேகரன்,மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் உள்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்
கூட்டத்தில் சர்வதேச அளவிலான போர் பதட்டத்திற்கான காரணங்கள், இந்தியாவில் தனியார்மயமாக்கல், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மதத்தின் பேரால் மக்களை பிழவுபடுத்தும் அரசியல் சூழல், மாநில சுயாட்சி, கடவுள் நம்பிக்கையின் பேரால் கலவரத்தை தூண்டும் சக்திகள், ஆகிய சமுக காரணிகளிடம் இருந்து ஏவ்வாறு மக்களை பாதுகாப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது.மேலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது. வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எவை ?என்பது குறித்து ஆலோசனை நடத்தி தீய தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.