திருச்சி மாநகராட்சியில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஜூன் 26 திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று துணை மேயர் ஜி. திவ்யா தலைமையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் உறுதிமொழியினை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் துணை ஆணையர் க . பாலு , உதவி ஆணையர் சசிகலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.