துலையாநத்தம் அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜூன் 26 அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி துலையாநத்தம் முசிறி வட்டம் திருச்சி மாவட்டம் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், துலையாநத்தம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பணியகம் இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். அரசு ஆதிந மேல்நிலைப் பள்ளியில் துலையாநத்தில் இருந்து துவங்கிய பேரணியை ஜம்புநாதபுரம் காவல் துறை உதவி ஆய்வாளர் மதிப்பிற்குரிய R.சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் MMG ஹரிஹர ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் இடையே போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், அதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு R. சண்முகம் பேசினார்.
பேரணி துலையாநத்தம் கிராமங்கள் முழுவதிலும் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. மாணவர்கள் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை மக்களிடையே வழங்கியும் கோஷங்கள் எழுப்பியும் சென்றனர். பேரணி பள்ளியில் வளாகத்தில் நிறைவு பெற்றது.
இதில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம், பாரத சாரண சாரணியர், மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜம்புநாதபுரம் போலீசார் செய்திருந்தனர்.