ஆக்டோபஸ் கரங்களால் அதிமுகவை பா.ஜ.க. அழித்துவிடும் : சி.பி.எம். மாநில செயலாளர் சண்முக பேட்டி

0 187
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27  அதிமுக வை காப்பாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.க கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வர வேண்டும் இல்லையென்றால் தன் ஆக்டோபஸ் கரங்களால் இந்தியாவில் உள்ள மற்ற மாநில கட்சிகளை அழித்ததை போல் அதிமுகவையும் பாஜக அழித்துவிடும் – சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இரண்டு நாட்கள் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,பா.ஜ.க- அதிமுக கூட்டணியை தோல்வி அடைய செய்வது.

ரயில் பயணிகளின் சலுகைகளை பறித்து வரும் பாஜக ஜீலை 1 ஆம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார்கள். இது கண்டனத்திற்குரியது . அந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.

ஜீலை 9 ஆம் தேதி பாஜக அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதற்கு சி.பி.எம் முழு ஆதரவை தெரிவித்து மக்கள் நலன் சார்ந்து அந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் முழு ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொண்டும்.
மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

தமிழக அரசு 50 ஆரம்பர சுகாதர நிலையஙகளில் டயாலிஸிச் சிகிச்சை அளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். அது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அதை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை நாங்கள் எதிர்க்கிறோம். அந்த முடிவை அரசு திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசே அந்த சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. பா.ஜ.க ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டை மக்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மொழி அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கு சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

திமுக கூட்டணியில் பிளவு வராதா திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறி அதிமுக உடன் இணையாதா என எதிர்ப்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது என அதிமுக கூறுவது அந்த ஏமாற்றத்தின் விளைவாக வரும் கருத்து.

அனைத்து கட்சிகளும் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என தான் விரும்புவார்கள். நாங்கள அதை விரும்புகிறோம். அதை தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் போது முடிவெடுப்போம்.

அதிக தொகுதி கேட்போம் என கூறியதால் திமுக தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. எத்தனை தொகுதி கேட்பது குறித்து எங்கள் கட்சி தான் முடிவெடுக்கும்.

எங்களின் போராட்டங்களை அரசு ஒடுக்கவில்லை, எங்கள் போராட்டங்கள் விளைவாக தான் அரசு ஊழியர் பிரச்சனை தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அந்த குழு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பரிந்துரையை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது

மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

பா.ஜ.க கூட்டணியில் அதிமுக மட்டும் தான் உள்ளது. மற்றவை எல்லாம் சிறு சிறு குழுக்கள் தான். அந்த கூட்டணியிலிருந்து கட்சிகளை பிரிக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக தான் உள்ளது வேறு கூட்டணியில் இருந்து கட்சிகளைப் பிரித்து எங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியா முழுவதும் பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளை பாஜக தன் உங்களுடைய ஆக்டோபஸ் கரங்களால் அழித்துவிட்டது அந்த நிலை அதிமுகவிற்கு வந்துவிடக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம். அதிமுக மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள கட்சி அந்த கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து அழிந்து விடக்கூடாது என்கிற கவலை எங்களுக்கு உள்ளது. அந்த
எச்சரிக்கையை தான் நாங்கள் திரும்ப திரும்ப கூறி வருகிறோம். அதிமுக வை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வர வேண்டும்.

அதிமுக பா.ஜ.க கூட்டணி பொருந்தா கூட்டணியாக உள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்கிற கோரிக்கையோடும் ரெய்டிற்கு பயந்தும் தான் பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளார்கள்.

சட்டம் ஒழுங்கு கெட்டு போய் விட்டது என கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. கடந்த காலஙகளை போல் அல்லாமல் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.