இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பில் இளைஞர்கள் கருத்தரங்கம்

0 234
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27 முத்தமிழறிஞர் கலைஞர்  பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில் இளைஞர்கள் கருத்தரங்கம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ‘தேசியக் கல்விக் கொள்கையும் இந்தியாவின் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் டாக்டர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி (மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் &IDRM Convenor) அவர்களும், ‘இன்றைய இளைஞர்களுக்கு இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் ருபினி (எழுத்தாளர் சமூகச் செயற்பாட்டாளர்) , ‘மதநல்லிணக்கம் தமிழர் மரபு’ எனும் தலைப்பில் அருணன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை)  சிறப்புரையாற்றினார்கள்.

‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்  பிறந்தநாளை முன்னிட்டு, நிகழ்வின் தொடக்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்வின் இறுதியாக மாநகர கழகச் செயலாளர் மு. மதிவாணன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.