சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.91.45 இலட்சம் பக்தர்கள் காணிக்கை

0 136
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ 91.45 லட்சம் ரொக்கம், 1 கிலோ 942 கிராம் தங்கம், 3கிலோ 280 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை.

சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்றதளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.

சமயபுரம் மாரியம்மன் கோவில், உபக்கோயிலான ஆதி மாரியம்மன் கோவில், உஜ்ஜியாயினி கோவில், போஜீஸ்வரர் கோவில் ஆகிய நான்கு கோவில்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் இரா.பிரகாஷ் தலைமையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.

இதில் ரூ 91லட்சத்து 45 ஆயிரத்து 067 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 942 கிராம் தங்கமும், 3 கிலோ 280 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது என கோவில் இணை ஆணையர் இரா.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.