குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் பாதிப்பு : நடவடிக்கை எடுக்க அமமுக வலியுறுத்தல்

0 263
Stalin trichy visit

திருச்சி ஜூன் 30  திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பாதித்த பொதுமக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டிப்புதூர் 57வது வார்டு, எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்தது வருவதாக புகார் எழுந்துள்ளது.

பொதுமக்கள் காய்ச்சல், வாந்தி, மயக்கம், போன்றவற்றால் பாதிக்கப்பட்டு ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாநகராட்சியால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வரும் இப்பகுதியில், பாதிக்கப்பட்ட இடங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் நேரில் ஆய்வு செய்து, அவதிக்குள்ளான மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். தற்காலிக நடவடிக்கையாக குடிநீர் வண்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு, இரண்டு நாட்களில் சரி செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

மாவட்டத் துணைச் செயலாளர் தன்சிங், காஜாமலை பகுதி செயலாளர் கதிரவன், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார், ஐடி பிரிவு செயலாளர் தருண், நிர்வாகிகள் ஸ்டீபன், மகாலட்சுமி, தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.