பெயிண்டிங் தொழிலாளி போஸ்கோ சட்டத்தில் கைது
திருச்சி ஜூன் 30- திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 34) பெயிண்டர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டு குளியல் அறையில் குளிக்கும் போது எட்டிப் பார்த்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதார். தாயார் உடனடியாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீராபாய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போஸ்கோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது