கஞ்சா விற்பனை செய்தவர் கைது

0 269
Stalin trichy visit

திருச்சி ஜூலை 2 திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து 1,250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.