ரூ.2 இலட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : 2 பேர் கைது
திருச்சி ஜூலை 2-திருச்சி கே.கே நகர் காஜாமலை காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து . கொண்டிருந்த காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சையது மஜியுல்லா ( வயது 26) வரகனேரி லட்சுமி நகரை சேர்ந்த உமர் பாரூக் (வயது 26) ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவரிடம் இருந்து 317 கிலோ புகையிலைப் பொருட்களையும், ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் ஆகும்.இந்த புகையிலை பொருட்கள் விற்பனையில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.