போலி பாஸ்போர்ட்டில் பயணித்தவர் கைது

0 225
Stalin trichy visit

திருச்சி ஜூலை 2-திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்  இலங்கையிலிருந்து  திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து இமிகிரேசன் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது விருதுநகர் மாவட்டம்
தங்கமணி நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் மனைவி ஜெயக்கொடி (வயது 62) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் தனது தாய்,கணவர் பெயரை மாற்றி போலி ஆவணம் தயாரித்து பாஸ்போர்ட் பெற்று வந்தது தெரிய வந்தது.இதை யடுத்து இமிகிரேசன் அதிகாரி ஸ்டீபன் கொடுத்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார்வழக்கு பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.