ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை: முசிறி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

0 256
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 2  முசிறி அருகே காடுவெட்டி பகுதியில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் பேரணியாக சென்று வீடு, வீடாக உறுப்பினர்களை சேர்த்தார்.

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான காடுவெட்டி பகுதியில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மக்களுடன் ஸ்டாலின் செயலி பயிற்சி மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடர்ந்து பேரணியாக முழக்கங்கள் எழுப்பி வீடு, வீடாக சென்று இனிப்புகள் வழங்கி உறுப்பினர்களை சேர்த்தனர்.

நிகழ்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர், தொடர்ந்து செல்லும் இடங்களில் பெண்களிடம் ஆயிரம் ரூபாய் பெறாதவர்கள் உடனடியாக பதிவு செய்து பயனடையவும் அறிவுறுத்தினார், காடுவெட்டி பகுதியில் அனைத்து வீடுகளுக்கு சென்று உறுப்பினர்களை சேர்த்து வீட்டில் ஓரணியில் தமிழ்நாடு என்ற அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை வீட்டில் ஒட்டினார், தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது,

தொடர்ந்து எம்எல்ஏ பேசுகையில் திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் கே என் நேருவின் தலைமையில் அனைத்து தொகுதிகளையும் திமுகவை வெற்றி பெறச் செய்வோம் என்றும், தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி செயல்படுவோம் என்று பேட்டி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.