இளைஞரை கத்தியால் குத்தியவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, ஜூலை 7 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் பிரவீன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் தகராறு செய்து விஜயகுமாரை கத்தியால் குத்தியுள்ளார்.இதில் விஜயகுமார் கடுகாயமடைந்தார்.இதை எடுத்து தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் விஜயகுமார் குடும்பத்தினர் தாக்கி விடுவார்கள் என்ற அச்சத்தில் பிரவீன் தூக்கிட்டு தற்கொலை .காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.