கூலி உயர்வு கேட்டு 2வது நாளாக காகித ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

0 21
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1 மணப்பாறை அருகே  கூலி உயர்வு கேட்டு 2வது நாளாக காகித ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்  தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் அலகு – 2 செயல்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 2400 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான 700 ரூபாயில் இருந்து 900 ரூபாய் வரை வழங்கிட வேண்டும், தரமான உணவு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை 6 மணியில் இருந்தும் பணிக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன், ஆலை நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் தொடர்ந்து நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு எந்தவித உடன்பாடும் ஏற்றப்படாத நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பணியை புறக்கணித்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.