தி.மு.க. நிர்வாகி கார் மோதி விமான நிலைய கான்கிரீட் தூண் சேதம்

0 120
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9 கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திருச்சி விமான லையத்தில் குவிந்தனர். அப்போது அவரை வரவேற்க வந்திருந்த தி.மு.க. பிரமுகரின் கார் மோதியதில் விமான நிலைய நுழைவுப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவற்காக நிறுவப்பட்டிருந்து கான்கிரீட் தூண் இடிந்து சேதமடைந்தது. காருக்கும் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து விமான நிலைய ஆணையக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் கடந்த 6 ஆம் தேதி கார் மோதி மேமரா பொருத்தப்பட்டிருந்து சிமெண்ட் தூண்டு இடிந்து சேதமடைந்தது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தூண்களை அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.