மணப்பாறையில் சமரச தீர்வு குறித்த விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜூலை 18 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப்பணிகள் குழுவின் சமரச தீர்வு மையத்தின் சார்பில் வழக்குகளில் சமரச தீர்வு காண்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மணப்பாறை பேருந்து நிலையம் அருகே இருந்து தொடங்கிய பேரணி மதுரை சாலையில் நிறைவு பெற்றது. இதில் மணப்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விபத்து, குடும்ப நலம், காசோலை, நுகர்வோர், கடன் சார்பு, நிலம், பாகப்பிரிவினை, வணிகம் மற்றும் இதர உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பயிற்சி பெற்ற சமரசர்கள் உதவியுடன் விரைவாக இறுதியாக சுமூகத் தீர்வு காண வழக்கு தரப்பினர்கள் தங்கள் வழக்கை நீதிமன்ற சமரச மையத்திற்கு அனுப்ப முடிவும் அதன் மூலம் தீர்வு காண்பதும் குறித்து விழிப்புணர்வு பேரணியில் தெரிவித்தனர்.
பேரணி முடிவில் நீதிபதிகள் மணப்பாறை மாண்புமிகு சார்பு நீதிபதி ராஜசேகரன் தலைமையிலும் , மாண்புமிகு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயமுருகன் , மாண்புமிகு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தர்மசீலன் அவர்கள், மாண்புமிகு குற்றவியல் நடுவர் நீதிபதி அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில்
இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் விஜய் துணை தலைவர் வள்ளிகண்ணு இணை செயலாளர் முல்லைசந்திரசேகர் நூலகர் கோபாலகிருஷ்ணன்மணப்பாறை வழக்கறிஞர்கள் சங்க மூத்த, இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
சமரச தீர்வு குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.