ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
திருச்சி, ஜூலை 18 திருச்சி கைலாஷ் நகரில் உள்ள AB ப்ரீ ஸ்கூல் சார்பில் நடந்த காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஓவிய போட்டி நடைபெற்றது. 15 பேர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொன்டு வெற்றி பெற்ற 3 நபர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் முதல் இடத்தை சங்கமித்ரா, இரண்டாம் இடத்தை ஸ்ரீ சாய் ஸ்ருதி, மூன்றாம் இடத்தை
ஹர்ஷித் கல்யாண் ஆகியோர் பெற்றனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி எஸ்.பி.ஐ லைப் துணை மேலாளர் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறுமிகளுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
AB Pre School நிர்வாக இயக்குநர் பரணி அருண் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.