ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

0 206
Stalin trichy visit

திருச்சி ஜூலை 18 திருச்சி கருமண்டபம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (வயது 33 ) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு மனைவி காயத்ரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து நேற்று காயத்ரி வீட்டுக்குசூரிய பிரகாஷ் சென்று வீட்டுக்கு வருமாறு அழைத்தாகதெரிகிறது. ஆனால் அவர் நீங்கள் குடியை விட்டால் தான் வாழ வருவேன் என்று கூறிவிட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சூரிய பிரகாஷ் காயத்ரி விட்டின் இரும்பு கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சூரிய பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.