விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி கோரி- உள்துறை செயலாளருக்கு குற்றப்பிரிவு டெப்டி சூப்ரண்டன்ட் கடிதம்
திருச்சி, ஜூலை 24 விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி கோரி திருச்சி மாவட்ட குற்றப்பிரிவுII காவல்துணை கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வை.பரத்ஸ்ரீனிவாஸ், உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, நான் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு IIல் காவல் துணைக் காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.
என் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால் நான் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன். நான் விருப்ப ஓய்வில் செல்ல எனக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.