கொள்ளிடம் ஆற்றில் ஆற்று மீன் வகைகள் கணக்கெடுக்கும் பணி
திருச்சி, ஏப்.20 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாத்துரை ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆற்று மீன் வகைகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.
லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் இயங்கி வரும் உழவன் அறக்கட்டளை மண் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இயற்கை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வான ஆற்று மீன்களின் வகைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் உழவன் அறக்கட்டளையின் நிறுவனர் திரு உழவன் ஜெகன் மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பாக முடித்து வைத்தனர் இதில் விலாங்கு, ஆரா, கெளுத்தி, கெண்டை வகைகள் உள்ளிட்ட 22 வகையான மீன்கள் பிடிபட்டது. ஆற்றில் கழிவுநீர்கள் கலப்பதாலும் மற்றும் பிளாஸ்டிக் போடப்படுவதாலும் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீன் வகைகளின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறுவர்கள் பெற்றோர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.