பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

0 155
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 31  அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாத ஊதியம் மற்றும் பணப்பயன்களை வழங்காதது கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக முழுவதும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணபயன்கள் மற்றும் மாத ஊதியத்தை வழங்காமல் உயர்கல்வித்துறை நிர்வாகம் வஞ்சித்துவருகிறது

இதனிடையே, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் பணி மேம்பாட்டு பணப்பயன் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாகவழங்கிடவேண்டும், உறுப்புக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்கிடவும், நிலுவையில் உள்ள அரசு உதவிபெறும்கல்லூரி ஆசிரியர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்கிட தமிழக அரசையும், உயர்கல்வித்துறையையும் வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோரிக்கை விளக்க போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மண்டல அளவிலான இந்த போராட்டத்தில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த அரசு உதவி பெறும் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை, இனியும் காலதாமதப்படுத்தினால் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ஈரோட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பது எனவும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.