பல்லபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் தீத் தடுப்பு மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வு
திருச்சி, செப்.5 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. முகாமின் 4 ம் நாளான இன்று காலை தீத்தடுப்பு,பாம்பு கடி, தண்ணீரீல் மூழ்கியவர்களுக்கு அளிக்கப்படும் முதல் உதவிகள் மற்றும் தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் R. பிரபு, UGLF V. விஜய் அமிர்தராஜ் மற்றும் தீயணைப்பு வீரர் M. அலோசியஸ் வில்பர் ஆகியோர் தீ விபத்து தடுப்பு மற்றும் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கும் விளக்கமளித்தனர்.