வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 17
Stalin trichy visit

திருச்சி, செப்.5 சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுதந்திர  போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்   பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம்  அருகில் உள்ள வ.உ.சிதம்பரனார்   திருஉருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன், அவைத்தலைவர் கோவிந்தராஜ், மாநில அணி நிர்வாகி செந்தில், பகுதி கழகச் செயலாளர் மோகன், சோழிய வெள்ளாளர் சங்க நிர்வாகிகள் டாக்டர் செந்தில், மகாலிங்கம், பேராசிரியர் மாணிக்கம், தங்க ரத்தினகுமார், டைமண்ட் பாலுபிள்ளை, திருநாவுக்கரசு. மற்றும் இந்நிகழ்வில் மாவட்ட மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.