மேயரை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

0 217
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 31  திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் கோழி கழிவுகளில் இருந்து மீன் தீவனம் தயாரிக்கும் பணி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கைக்கு எதிராக செயல்படுவதாக  தி.மு.க -33 , காங்கிரஸ்- 2 , கம்யூனிஸ்ட் கட்சி 1 என 36 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருச்சி திருவெறும்பூர்  தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரியமங்கலம் குப்பை கிடங்கு உள்ளது இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்பது பல வருட கோரிக்கையாக உள்ளது. அதனை அகற்ற வேண்டும் என திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதே பகுதியில் கோழி கழிவுகளை வைத்து மீன் தீவனம் தயாரிக்கும் தயாரிக்கும் பணி நடப்பதற்கான இடம் அங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனை கண்டிக்கும் விதமாக  திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற  கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன் உள்பட தி.மு.க. கவுன்சிலர்கள் 33 பேர், காங்கிரஸ் 2 பேர், கம்யூனிஸ்ட் கட்சி 1 என மொத்தம் 36 கவுன்சிலர்கள்  ஒரே நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருச்சி தெற்கு மாவட்ட தலைவரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமலைக்கு எதிராக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி தற்போது வெளிநடப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.