தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் : பா.ஜ.க. தேசிய இணை பொறுப்பாளர் பேட்டி
திருச்சி, ஆக.6 மக்களை ஏமாற்றிய திமுக காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் -பாரதிய ஜனதா கட்சி தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி திருச்சியில் பேட்டி .
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுதந்திர தினத்தை ஒவ்வொரு வருடமும் ஒரு பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
இவ்வருடம் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை தேசத்தின் மக்கள் மூவர்ணக் கொடி ஏந்தி கொண்டாட வேண்டும் , எனவே வருகின்ற சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட முடிவு எடுக்கப்பட்டு திரங்கா மூவர்ணக் கொடி யாத்திரை வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றுதல் மற்றும் தூய்மை பணிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இந்த யாத்திரை மற்றும் இதர பணிகளை ஒருங்கிணைக்கவும் வழி நடத்திடவும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
இதில் முன்னாள் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் வீடு வீடாக தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுதாகர் ரெட்டி :-
திரங்கா யாத்திரா இந்தியா முழுவதும் ஆப்ரேஷன் சிந்துரின் வெற்றியை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் இந்த யாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடம் நாட்டுப்பற்றை உருவாக்கும் விதத்தில் செயல்படுத்தப்படும். தேசத்துக்கு எதிராகவும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தவறாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மோடியின் புகழை பொறுத்துக் கொள்ள முடியாமல் ராகுல் காந்தி அவ்வாறு பேசுகிறார். ராகுல் காந்தி பேசியது போல் எதிரி நாட்டவர்கள் கூட நம்மைப் பற்றி அப்படி பேச மாட்டார்கள். ராகுல் காந்தியின் பேச்சுக்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது ராகுல் காந்தி எம்பி பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர், தொடர்ந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் பிஜேபியை குறை கூறி வருகிறார். காங்கிரஸ் ஓர் மூழ்கும் கப்பல் அதை மறைப்பதற்காக இந்திய நாட்டின் மீது குறை கூறி வருகிறார். திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை மாறாக லஞ்சம் ஊழல் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
திமுக செய்த சாதனைகளை சொல்லாமல் பாரதிய ஜனதா கட்சியை குறை கூறி வருகிறது, அமீத்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியது போல் தேசிய ஜனநாயக கூட்டணி 2026 இல் தமிழக மக்கள் ஆசியுடன் ஆட்சி அமைக்கும். மக்களை ஏமாற்றிய திமுக காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி திமுகவில் விளம்பர மாடல் அரசை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசை, மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராத அரசை, திராவிட மாடல் எனக்கூறி மக்களை ஏமாற்றும் அரசை வீழ்த்துவோம் என்றார்.
திரங்கா யாத்திரையை பொறுத்தவரை இதில் அரசியல் கிடையாது இதில் தேசப்பற்றுள்ள அனைவரும் பங்கு பெறலாம் . தமிழகத்தில் கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றார்.