துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக.6 திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு அருகே அய்யம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 4 ,7 .10 ,13 , ஆகிய வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன்
ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு நகராட்சி தலைவர் காயம்பூ தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பட்டுசாமி திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, திருச்சி மாவட்ட டி ஆர் ஓ ராஜலட்சுமி,திருச்சி மாவட்ட ஆர் டி ஓ அருள்,சமூகத் திட்ட தனி தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நத்தம்பத்தா துவாக்குடியை சேர்ந்த சர்புதீன், மணிகண்டன், பழனிச்சாமி மற்றும் ஆறுமுகம் ஆகியோருக்கு வழங்கினார்.
இதே போல் துவாக்குடி நகராட்சி சார்பில் சொத்துவரி பெயர் மாற்றம் பாரதிதாசன் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரங்கராஜ், சர்ச் தெருவை சேர்ந்த சிராஜுதீன் ஆகியோருக்கு அதற்கு உண்டான ஆணையை வழங்கினார். குடிநீர் வரி பெயர் மாற்றம் மரிய தங்கம் என்பவருக்கு அதற்கான ஆணையை வழங்கினார். இதையடுத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் பிரியதர்ஷினி என்பவருக்கு அதற்கு உண்டான மருத்துவத்தையும் வழங்கினார் . கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பெட்டகங்களையும் வழங்கினார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்துபெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார். இது முகாமில் துவாக்குடி நகராட்சி நிர்வாகிகள்அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.