சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆறுதல்
திருச்சி, ஆக.9 திருச்சி அருகே கார் இருசக்கர வாகனம் மோதி விபத்து – 3 பேர் பலி 6 பேர் படுகாயம்-
திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
லால்குடி முஸ்லீம் தெரு தேர்முட்டியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்காக இன்று திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டார். சந்தோஷ் தனது குடும்பத்தினருடன் ஒருகாரில் சென்றுள்ளார். அவரை வழியனுப்ப அவரது நண்பர்கள் அரவிந்த்(20), சாதிக்(20), உள்ளிட்ட 8 பேர் மற்றொரு காரில் சென்றனர். சந்தோஷ் சென்ற கார் முன்னால் சென்றுவிட அவரது நண்பர்கள் சென்ற கார் லால்குடி திருச்சி ரோட்டில் சரஸ்வதி கல்லூரி முன்பு வந்த போது, அந்த ரோட்டில் எதிரே வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அரவிந்த் சம்ப இடத்திலேயே இறந்தார். பின்னர் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சாதிக் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் பைக்கில் வந்த விஸ்வநாதன் (56) என்பவரும் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அமைச்சர் கே.என்.நேரு திருச்சி அரசுமருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உடலுக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயமடைந்தவரை பார்வையிட்டு ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்கும் கேட்டுக் கொண்டா