டாரஸ் லாரி மாயம்: போலீசில் புகார்

0 268
Stalin trichy visit

திருச்சி ஆக9 – திருச்சி பாலக்கரை காஜா பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சைமன் லூர்துராஜ் (வயது 48) இவர் மன்னார்புரத்தில் உள்ள ஒரு மெட்டல் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பாலக்கரை காஜா பேட்டை மெயின் ரோட்டில் டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு அருகில் சென்றார்.
இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் டாரஸ் லாரியை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். இந்த சம்பவம் குறித்து சைமன் லூர்து ராஜ் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டாரஸ் லாரி மற்றும் அதனை திருடிய மர்ம ஆசாமியை தேடிவருகின்றன ர்.

Leave A Reply

Your email address will not be published.