தெப்பக்குளம் பழவியாபாரி திடீர் மாயம்

0 132
Stalin trichy visit

திருச்சி ஆக 11 திருச்சிதாராநல்லூர் வசந்தா நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் ( 74). தெப்பக்குளம் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். கடந்த 6ம் தேதி கடையை மூடிவிட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .பல இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருச்சி அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகை நேற்று அரியமங்கலம் பகுதியில் வழக்கம் போல ரோந்து பணி சென்றார் .அப்போது அங்கு 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இருந்து கிடந்தது தெரியவந்தது .இது குறித்து அவர் அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார் போலீசார் உடலை கைப்பற்றி இறந்த முதியவர் யார் ?என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர் சாவு

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புது காலனி சேர்ந்தவர் வெள்ளிமலை (57), திருச்சி மாநகராட்சி 25- வது வார்டில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டுக்கு சைக்கிளில் வரும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் இதில் அவருக்கு தோள்பட்டைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.