கருப்பு முருகானந்தத்தின் மீது நடவடிக்கை எடுக்காததற்கு பாஜகவின் முக்கிய புள்ளிகளே காரணம்: பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு

0 14
Stalin trichy visit

திருச்சி, நவ.5  கருப்பு முருகானந்தத்தின் மீது நடவடிக்கை எடுக்காததற்கு பாஜகவின் முக்கிய புள்ளிகளே காரணம் – கருப்பு முருகானந்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு.

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவரை பாஜகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண் திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கருப்பு முருகானந்தத்தின் மீது திருமணம் செய்வதாக கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்டு ஏமாற்றியது, மிரட்டுவது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருப்பு முருகானந்தம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை கருப்பு முருகானந்தத்திற்கு முன் ஜமின் வழங்க மறுத்தது. அதன் பின்பும் அவர் கைது செய்யப்படவில்லை தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது:

எனக்கு பெங்களூருவில் சொத்து பிரச்சனை இருந்தது நானும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தேன். இந்நிலையில் என்னை சந்தித்த கருப்பு முருகானந்தம் அந்த பிரச்சனையிலிருந்து என்னை பாதுகாப்பதாக தெரிவித்தார். அதன் பின் நான் அவருடன் பழகினேன் என்னை திருச்சியில் வந்து குடியமர்த்தினார். என்னுடைய குழந்தைகளுக்கு அவர்தான் பாதுகாவலர் என கூறி பள்ளிகளில் சேர்த்தார். ஆரம்பத்தில் அவருக்கு திருமணம் ஆனது எனக்கு தெரியாது அதன் பின் நான் தெரியும். இருந்தபோதும் அவர்கள் குடும்பத்தோடும் நான் நன்கு பழகினேன் ஆனால் போக போக தான் அவர் என் சொத்தை அபகரிக்க முயற்சிக்கிறார் என்பது தெரிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு அடிமையாக தான் இருந்தேன். அவர் கூறிய அனைத்தையும் செய்து வந்தேன். இது அவர் என் மீது பழி சுமத்தியதால் தான் நான் இது குறித்து முதலில் கட்சி மூலமாக புகார் தெரிவித்தேன். அதன் பின்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு அவர் மூலமும் அவருடைய நண்பர்கள் மூலமும் பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளது.

அதையும் மீறி தான் நான் புகார் அளித்தேன். என்னுடைய புகாரின் மீது வழக்கு பதிவு செய்தார்கள் அதன் பின் அவர் முன் ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அவர் தலைமறைவானார் இருந்த போதும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை எனக்கு பலர் கூறினார்கள். அது குறித்து நான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன் ஆனால் போலீசார் அவர்களை கைது செய்யவில்லை. சுமார் 40 நாட்களுக்கு மேலாக அவர் வெளியில் தான் இருந்தார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தில் அவர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார் உச்ச நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

விஜய் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என கூறினார்கள் ஆனால் ஒரு பெண்ணை துன்புறுத்திய நபர் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்பது தான் தெரியவில்லை.

கருப்பு முருகானந்தத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு பாஜகவில் இருக்கும் முக்கிய புள்ளிகள் தான் காரணம். அவர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் பலர் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் குறிப்பாக அவருடைய சொந்த ஊரான முத்துப்பேட்டையில் இருக்கும் பாஜக நிர்வாகிகள் முழுக்க முழுக்க அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

இந்த சூழலில் உச்சநீதிமன்றமும் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட எனக்கு நீதி வேண்டும். கருப்பு முருகானந்தரின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.