அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

0 171
Stalin trichy visit

திருச்சி ஆக 13  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்துள்ள நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி சந்தையை முடக்கும் வகையில் செயல்படும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்திய அரசு அடிபணியக் கூடாது, இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தவும், இந்தியா இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிடவேண்டும் என்பதனை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து நடத்தும் தேசம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் அரசமரத்தடியில் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

.இதில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டிசி, எச்எம்எஸ், சம்யுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும், அமெரிக்க ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.