காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

0 239
Stalin trichy visit

திருச்சி, ஆக.14 முசிறி அடுத்த காடுவெட்டியில் திருட்டுத்தனமாக காவேரி கரையில் மணல் அள்ளிய நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் தப்பி ஓட்டம்
திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த காடுவெட்டியில் காவிரி ஆற்றிலிருந்து திருட்டு மணல் அள்ளுவதாக கொட்டியம் காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தொட்டியம் ஆய்வாளர் சரவணன் தனது குழுவினருடன் நேற்று இரவு காவேரி கரையில் பிடாரி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருடப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நான்கு வண்டியை பறிமுதல் செய்தனர். காவல்துறையை பார்த்ததும் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். நான்கு வாகனத்தையும் காட்டுபுத்தூர் காவல் நிலையம் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.