தேசியக் கொடியுடன் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் பேரணி
திருச்சி, ஆக.14 இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனபேரணி
இந்தியாவின் 79 ஆவது சுதந்திரதின விழா நாளை நாடு முழுவதும் எழுச்சியுடன் நாளை (ஆக.15) கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை வரவேற்று பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் பெருமை மூவர்ணக்கொடி, தேசியக்கொடி என் உயிரினும் மேலானது என்பதை எடுத்துரைக்கும் விதமாக ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையினரின் தேசியக்கொடி இருசக்கர வாகன பேரணி இன்று திருச்சியில் நடைபெற்றது.
ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின் ஐந்தாவது படைப்பிரிவு சார்பில், காஜாமலை ரயில்வே பாதுகாப்பு சிறப்புபடை மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த தேசியக்கொடி இருசக்கர பேரணியை, கமாண்டிங் ஆபிசர் ஸ்ரீநிவாஸ் முன்னிலையில் ரயில்வே பாதுகாப்புபடையின் கோட்ட பாதுகாப்பு ஆணையர் பிரசாந்த் யாதவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பேரணியில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு சிறப்புபடையினர் கையில் தேசியக் கொடியும், தேசியக்கொடி என் உயிரினும் மேலானது என்ற வாசகம் அடங்கிய பதாகை இணையும் கைகளில் ஏந்தியபடி காஜாமலை, மன்னார்புரம், சுந்தர்நகர், எல்ஐசி காலனி, கே.கே நகர் வழியாக பேரணியாகச்சென்று, மீண்டும் காஜாமலை ரயில்வே பாதுகாப்பு சிறப்புபடை மைதானத்திற்கு வந்தடைந்தனர்.