தேர்தல் ஆணையத்தை கண்டித்து மகாத்மா காந்தி சிலைக்கு மனு கொடுக்கும் போராட்டம்
திருச்சி, ஆக.15 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி காமராஜர் சிலை முன்பு தேர்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மகாத்மா காந்தி்சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் ஜெ. இளையராஜன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆணைக்கிணங்க
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் ஜெ. இளையராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் “வாக்குத் திருடனே பதவி விலகு” என்று கோஷத்துடன் தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புள்ளம்பாடி காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புள்ளம்பாடியில் உள்ள காமராஜர் சிலை ரவுண்டானாவில் தொடங்கி பேரணியாக திருச்சி சிதம்பரம் சாலை வழியாக சகாய மாதா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை வரை சென்று காந்தி சிலைக்கு மரியாதை செய்துவிட்டு மகாத்மா காந்தி அடிகள் சிலைக்கு மனு கொடுத்தல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ரெங்கராஜன், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சிவசாமி, கண்டன உரை ஆற்றினர்.
இந் நிகழ்வில் புள்ளம்பாடி செயலாளர் திருநாவுக்கரசு, புள்ளம்பாடி வட்டாரத் தலைவர் தங்கவேலு, சிறுபான்மை பிரிவு ஜான்முகமது, வர்த்தக பிரிவு துணைத் தலைவர் சுந்தர்ராஜ், விவசாய பிரிவு சோமசுந்தரம், லால்குடி வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன், லால்குடி நகர தலைவர் ஆனந்த் பாபு, மகிலா காங்கிரஸ் தலைவி அயிலம்பால், துணைத் தலைவர் ராஜராஜசோழன், மண்ணச்சநல்லூர் நகரத் தலைவர் அருணாச்சலம், புள்ளம்பாடி ராமசாமி,மாவட்டத் துணைத் தலைவர் பாபுராஜ், லால்குடி அப்துல் காதர், VMTமூர்த்தி, பரமசிவம், சிறுகளத்தூர் செல்வராஜ், ரத்தினம், கமலேஷ்,பாண்டி, தாபாய் செல்வராஜ், ஊவனூர் ரத்தினசாமி, குமுளூர் பழனிச்சாமி ,அன்பு ரோஸ் வாழப்பாடி செல்வராஜ் கணபதி சீனிவாசன் ராஜேந்திரன் கோவிந்தராஜ் ஆறுமுகம் பாலசுந்தரி மாலா ஜீவா உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.