தனியார் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய திமுக பிரமுகர்
திருச்சி, ஆக.15 திருச்சியிலிருந்து நம்பர் ஒன் டோல்கேட் பகுதி வழியாக புறநகர் செல்லும் பேருந்துகள் வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து நம்பர் ஒன் டோல்கேட் வழியாக நாமக்கல் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றது. அப்போது நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் தனியார் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன் பகுதியில் நின்ற கார் பேருந்தை மறித்தவாறு நின்றிருந்தது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்து காரை எடுக்குமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கார் ஓட்டுநர் – பேருந்து ஓட்டுநர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவம் காரணமாக நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இது குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் பேருந்தை அங்கிருந்தை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநரையும் அப்புறப்படுத்தினர் உடனடியாக போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இது குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த காரை இயக்கி வந்தவர் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி என தெரிய வந்தது .தனியார் பேருந்து ஓட்டுநரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ( ஏர் ஹாரன்) ஒலிப்பான்களை பயன்படுத்தும் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
இதுபோல அசம்பாவிதங்கள் வேறு எங்கும் நடைபெற வண்ணம் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பறிமுதல் செய்து பேருந்துகளுக்கு அவதாரம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்….