அட்மா திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

0 269
Stalin trichy visit

திருச்சி, ஆக.15அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார விவசாயிகளுக்கு மேல ஆலத்தூர் குடியாத்தம் கரும்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து சென்று அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் நிலைய தலைவர் சரவணன் மற்றும் பேராசிரியர் பேசுகையில் கரும்பில் விதை கரணை தேர்வு ரகம் தேர்வு அதிக சர்க்கரை அளவு உள்ள ரகங்கள் கரணை நேர்த்தி ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் நாற்றங்கால் தயார் செய்தல் நடவு வயலில் உர மேலாண்மை பற்றி விரிவாக விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

உதவி பேராசிரியர் நம்பி பேசுகையில் கரும்பில் ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு, களைக்கொல்லிகள் பயன்படுத்தும் மற்றும் தெளிக்கும் நாசில்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார். மேலும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள co குடியாத்தம் 6 மற்றும் 7 சிறப்பியல்புகள் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சத்திய பிரியா அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் உதவி தொழில் நுட்ப மேலாளர் சபரி செல்வன், உதவி மேலாளர் கார்த்திக் லால்குடி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.