சுதந்திர தின விழாவில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் சதீஷ்குமாருக்கு பாராட்டு சான்று
திருச்சி, ஆக.15 திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 79 ஆவது சுதந்திர தினவிழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் வே. சரவணனிடமிருந்து கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேரா.கி.சதீஷ்குமார் பாராட்டு நற்சான்றிதழ் பெற்றார்.
கலைகளின் வாயிலாகக் கல்விப்பணி, களப்பணி தொடர் சூழலியல் விழிப்புணர்வுப் பணி ஆற்றியமையைப் பாராட்டி வழங்கப்பட்டது.
சான்று பெற்ற சதீஷ்குமாருக்கு கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ, முதல்வர் ஆசிரியர்கள் … மாணவர்கள் மற்றும் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் K.C. நீலமேகம், மோகன் , வரகனேரி ரவிச்சந்திரன், நவீன் உள்ளிட்ட நண்பர்கள், அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.