புள்ளம்பாடி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

0 721
Stalin trichy visit

திருச்சி ஆக.15 அரசுப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரூராட்சித் தலைவர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புள்ளம்பாடி பேரூராட்சித் தலைவர்  ஆலிஸ் செல்வராணி செல்வராஜ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து ரூ5000 மதிப்புடைய தகவல் பலகையை SMC உறுப்பனர் ஹென்றி பிரபாகரன் வழங்கினார்.மேலும் மாணவிகளின் தற்காப்புப் பயிற்சிக்காக ரூ. 12500 மதிப்புள்ள 250 சிலம்பம் குச்சிகளை SMC தலைவர்   நித்யா, உறுப்பினர்கள் நாகராஜ்,  வெண்ணிலா , அசினா பேகம்,  ராணி ஆகியோர் வழங்கினர்.

இவ்விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மா. சரவணவேல் தலைமையேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், நகரச் செயலாளர் முத்துக்குமார், ஜோசப் செல்வராஜ், நாகராஜன், திருநாவுக்கரசு ,PTA தலைவர் பாஸ்கர் மற்றும் SMC தலைவர் திருமதி நித்யா மற்றும் உறுப்பினர்கள் வெங்கடாசலபுரம் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்  ஹென்றி பிரபாகரன் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலகத்தினர் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.