குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு
திருச்சி, ஆக.16 திருச்சி திருவெறும்பூர் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு
உளுந்தூர்பேட்டை சேர்ந்தவர் குடியரசு மணி இவரது மகன் இளைய மகிழன் (13). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய இவர் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவரது மாமா இளையராஜா பெல் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் தங்கி பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்து உள்ளான்.
இந்த நிலையில் நேற்று சுதந்திர தினத்தில் கொடி ஏற்று விழாவிற்கு பள்ளிக்குச் சென்ற மாணவன் கொடியேற்று விழா முடிந்த நிலையில் கூத்தைப்பார் பகுதியில் உள்ள முக்கத்தி குளத்திற்கு சென்று தனது நண்பர்கள் 4 பேருடன் இளைய மகிழன்குளத்தில் இறங்கி குழித்துள்ளான்.
இந்நிலையில் இளைய மகிலன் தண்ணீரில் மூழ்கி உள்ளான் சக மாணவர்கள் கூச்சலிட்டதை பார்த்து அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் குதித்து இளைய மகிழனேனே தேடிய பொழுது தண்ணீரில் மூழ்கிய இளைய மகிழனை சடலமாக மீட்டு உள்ளனர்.
இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைய மகிழனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.