மகளிர் விடியல் பயணப் பேருந்து சேவை: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 120
Stalin trichy visit

திருச்சி, ஆக.19  மகளிர் விடியல் பயணப் பேருந்து சேவை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிகொடியசைத்து துவக்கி வைத்தார் .

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சரூமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவராயநேரி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக மகளிர் விடியல் பயண பேருந்து வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.  இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று அப்பகுதி மக்கள் மற்றும் மகளிர், தாய்மார்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தேவராயன் நேரில் இருந்து சத்திரம் பேருந்து வரை மகளிர் விடியல் பயண பேருந்து போக்குவரத்தை கொடியாசைத்து துவக்கி வைத்தார்,
மேலும் இந்த மகளிர் விடியல் பயண பேருந்து ஆனது காலை 10 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தேவராயநேரி வந்தடைந்து 11 மணிக்கு தேவராயநேரியிலிருந்து சத்திரம் வரையிலும் பின்பு மதியம் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து12 மணிக்கு புறப்பட்டு தேவராய நெறி வந்தடைந்து மதியம் 1:20 தேவராய நீரிலிருந்து புறப்பட்டு சத்திரம் நோக்கியும் மாலை 3 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தேவாரநேரிககும் என ஐந்து முறை இயக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சி போக்குவரத்து பொது மேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர் சாமிநாதன், ராஜேந்திரன் மற்றும் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை,திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி கூத்தைபார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பேரூராட்சி செயலாளர் தங்கவேல் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் மகளிர் மற்றும் தாய்மார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.