17 வயது சிறுவனுக்கு கத்தி குத்து : ரவுடி கைது

0 1,093
Stalin trichy visit

திருச்சி ஆக 27  திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி
கிஷோர் (வயது 21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சில சிறுவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் கடந்த 24 ந்தேதி அந்த 17 வயது சிறுவன் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிஷோர் அவரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காயமடைந்த 17 வயது சிறுவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு 17 வயது சிறுவனை பிடித்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய பூரான் என்பவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.