முதியவரிடம் தகராறு செய்த 3 பேர் கைது

0 190
Stalin trichy visit

திருச்சி ஆக 27  திருச்சி சாத்தனூர் மணல்மேல் பட்டியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது61) ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவர் நேற்று கேகே நகர் தென்றல் நகர் பகுதியில் உள்ள உணவகத்திற்கு தன் மருமகனுடன் உணவருந்த வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் மது போதையில் கிறிஸ்டோபர் மற்றும் அவரது மருமகனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து ஏர்போர்ட் அம்பலக்காரன் பட்டியைச் சேர்ந்த ராஜ் கண்ணன் (வயது 43, ) கார்த்திக் (வயது26) மற்றும் அண்ணாமலை (வயது 27)ஆகிய மூன்று பேரரை கைது செய்து பின்னர் ஜாமினில் வெளியே விட்டனர்.

ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

திருச்சி திருவானைக்கோவில் அழகிரி புரததைச் சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது42 )ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது 23). இவரும் ஆட்டோ ஓட்டுநர், மேலும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது இந்த நிலையில் கடந்த 26 ந் தேதி இவர் குடித்துவிட்டு ராகவேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் முகமது அலியை செல்போன் செயலி ஆட்டோ சங்கத்திலிருந்து நீக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகமது அலி கத்தியால் குத்தி ராகவேந்திரனை காயப்படுத்தியுள்ளார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து முகமது அலி ஜின்னாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.