திருச்சியில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம் : போக்குவரத்து மாற்றம்

0 277
Stalin trichy visit

திருச்சி, ஆக. 28  திருச்சியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்திற்கு மாநகரக் காவல் ஆணையர் மேற்பார்வையில் 1,500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் 1,168 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இந்நிலையில், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலப் பாதுகாப்புக்கு மாநகரக் காவல் ஆணையர் ந.காமினி மேற்பார்வையில் 2 காவல் துணை ஆணையர்கள், 10 காவல் உதவி ஆணையர்கள், 37 காவல் ஆய்வாளர்கள், 95 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
ஊர்வலத்தின்போது முக்கிய சாலை சந்திப்புகள், பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறாத வகையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்:

விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி திருச்சி மாநகரில் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை 4 மணி முதல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) அதிகாலை 6 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புறநகர் பேருந்துகள்:

துறையூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வரும் புறநகர் பேருந்துகள் நெ.1 சுங்கச் சாவடியில் இருந்து கொள்ளிடம் பாலம், காவல் சோதனைச் சாவடி எண்.6, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு வழியாகச் சென்று மாம்பழச் சாலை சந்திப்பில் பயணிகளை இறக்கி, ஏற்றிவிட்டு பின்னர், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், ராஜகோபுரம், காந்தி சாலை, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, காவல் சோதனைச் சாவடி எண்.6, புதிய கொள்ளிடம் பாலம் வழியாகச் செல்ல வேண்டும்.

நகரப் பேருந்துகள்:

லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், வாத்தலை ஆகிய பகுதிகளில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வரும் நகரப் பேருந்துகள் நெ.1 சோதனைச் சாவடியில் இருந்து கொள்ளிடம் பாலம், காவல் சோதனைச் சாவடி எண்.6, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு வழியாகச் சென்று மாம்பழச் சாலை சந்திப்பில் பயணிகளை இறக்கி, ஏற்றிவிட்டு பின்னர் அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், ராஜகோபுரம், காந்தி சாலை, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் சாலை, காவல் சோதனைச் சாவடி எண்.6, புதிய கொள்ளிடம் பாலம் வழியாகச் செல்ல வேண்டும் என்று மாநகரக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.