உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் செயல்பாடுகள்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 220
Stalin trichy visit

திருச்சி, ஆக.29 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும், முகாமின் செயல்பாடுகளையும் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், திருச்சி வட்டாட்சியர் (மேற்கு) பிரகாஷ், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.