இளைஞர் தலையை துண்டித்து கொடூர கொலை: 3 பேர் கைது
திருச்சி, செப். 3 முசிறி அருகே இளைஞர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே முள்ளிபாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த துறையூர், ஆலத்துடையான்பட்டி, தெற்கு காலனியைச் சேர்ந்த சுரேஷ்(33) துறையூர் ஆழத்துடையான்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த கல்பேஷ், அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் குமார் என்கின்ற படையப்பா ஆகிய இருவர்
கல்பேஷ் தம்பி தியாகராஜனை சுரேஷ் மற்றும் இருவர் சேலத்தில் கொலை செய்ததாகவும், இது தொடர்பான வழக்கு சூரமங்கலத்தில் உள்ளது.
இந்நிலையில் தனது தம்பியை கொன்றவனை கொலை செய்ய வேண்டும் என்று சுரேஷ் தலையை துண்டிக்கப்பட்டு தலையை தூக்கி எறிந்து பழிக்கு பழி வாங்கியதாக கூறப்படுகிறது, கல்பேஷ், அஸ்வின்குமார் ஆகியவர்களுக்கு கொலை செய்ய வழிகாட்டியாக இருந்ததாக முள்ளிப்பாடியைச் சேர்ந்த பரமேஸ்வரன் கைது, துண்டிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட தலை முள்ளிப்பாடி ஏரி பகுதியில் மீட்கப்பட்டது, மற்றும் சிலரை தொட்டியம் போலீசார் தேடி வருகின்றனர்..