வேளாண் பயிற்சிகளை வழங்கிய காந்தி கிராமப் பல்கலைக்கழக மாணவிகள்

0 284
Stalin trichy visit

திருச்சி, செப்.9  காந்திகிராமப் பல்கலைக்கழக மாணவிகள் வழங்கிய வேளாண் பயிற்சிகள் – 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உணவளிப்பு

திருச்சி மாவட்டம் இருங்களூரில், திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவிகள் பல்வேறு வேளாண் பயிற்சிகளை வழங்கினர்.

அசோலா வளர்ப்பு, மண்புழு உரம்(Vermicompost), மூடாக்கு(Mulching), ஏர் லேயரிங், தண்டு கட்டுதல் (Trunk Banding), வாழைத்தண்டு பொறி, கொய்யா கவாத்து முறை(Pruning), உயிர் உரங்கள் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இப்பயிற்சிகள் விவசாயிகளின் நிலத்தில் நடைமுறை விளக்கங்களுடன் வழங்கப்பட்டதால், விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இருங்களூர் மற்றும் மகிழம்பாடி பகுதிகளைச் சேர்ந்த பல விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர். மேலும், 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உணவளிப்பு நிகழ்வையும் ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவர்  எஸ். வின்சென்ட், சமயபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜ்குமார், பொருளாளர் கண்ணன், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் பிரேம், மகிமை ஆகியோர் ஆதரவு வழங்கினர்.

அத்துடன், இருங்களூர் பஞ்சாயத்து செயலர்  சதீஷ், பிச்சாண்டவர் கோவில் செயலர் சார்ல்ஸ் மார்ட்டின் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவிக்கவும் இத்தகைய பயிற்சிகள் பெரிதும் உதவும் என மாணவிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.