இறந்தவர் பெயரில் வாக்காளர் அட்டை : அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
திருச்சி, செப்.9 இறந்தவர் பெயரில் வாக்களார், அட்டை – உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடத்தில் மனு
திருச்சி மாவட்டம், மல்லியம்பத்து கிராமம், ராமநாதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் அருள்ராஜ், மற்றும் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை மனு அளித்தனர்.
அம்மனுவில் மெர்சீலா என்ற பெண்மணி கடந்த 2020ம் வருடம் 70 வயதில் இறந்து விட்டார். இது தொடர்பாக இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவரது பெயருக்கு வாக்காளர் அடையாள அட்டை 31.07.2025 அன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்க்கு தேர்தல் அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்துள்ளர்கள்.
மேலும் மெர்சீலாவின் கணவர் இறந்த நிலையில் சோமு என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் மெர்சீலாவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் சோமுவின் மகன் கோபிநாத் இறந்தவரின் பெயரில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்து பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
எனவே வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்யவும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தவர் மீதும் மற்றும் அதற்க்கு ஒத்துழைப்பு தந்த அதிகாரி மீதும் நடவடிக்கை வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.